2026 மே 06, புதன்கிழமை

மட்டு. நகர அபிவிருத்தி; சு.கா உறுப்பினர்கள் மேற்பார்வை

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இடம்பெற்று வரும் அபிவிருத்தி வேலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும்  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு நகர அபிவிருத்திக்கு மேலும் 3 பில்லியன் ரூபாய் நிதியமைச்சினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாக வழங்கப்பட்டள்ளதாகவும் மற்றும் 3000 சூரிய சக்தியில் இயங்கும் மின்குமிழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிதியினால் திருப்பெருந்துறை மற்றும் புதூர் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகள், சேத்துக்குடா மற்றும் நாவற்குடாவல் அப்பிரதேச மக்களின் நன்மை கருதி பொழுதுபோக்கு பூங்கா என்பன அமைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதன்போது புனரமைக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி, சுவாமி விபுலானந்தர் மற்றும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கால நீர் வீழ்ச்சியையும் பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .