2026 மே 06, புதன்கிழமை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியிருப்பு தொகுதியின் புதிய அமைப்பாளருக்கு வரவேற்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியிருப்பு தொகுதியின் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கத்துக்கான வரவேற்பு இன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் ஆலாசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து மற்றும் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

களுவாஞ்சிகுடி சந்தியிலிருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட பிரமுகர்கள், தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இராசமாணிக்கத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

மலர் மாலையை இராசமாணிக்கத்தின் மகன் இராஜபுத்திரன் அணிவித்தார்.

பட்டிருப்புத்தெகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மேற்படி அமைப்பாளர் சாணக்கியன் - தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இராசமாணிக்கத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .