2026 மே 06, புதன்கிழமை

விபத்தில் பெண் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது  ஆடை மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கியதால் பெண்ணொருவர் நடுவீதியில் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், வந்தாறுமூலையைச் சேர்ந்த 30 வயதான ஸாஹிறா பானு அனஸ் என்ற பெண்ணே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவர் செங்கடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .