2026 மே 06, புதன்கிழமை

யானை தொல்லையிலிருந்து பாதுகாக்க விசேட டோச் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளனர் பிரிவில் வாழும் மக்கள் யானைத் தொல்லையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விசேட டோச் லைற்களை கேயார் நிறுவனம் இன்று செவ்வாய்க் கிழமை வழங்கிவைத்தது.

வவுணதீவுப் பிரதேச எல்லைப் பகுதியில் யானை வேலி அமைக்கப்பட்டள்ள போதிலும் அவற்றுக்கு அப்பாலும் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதனால் அப் பகுதியில் மக்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்தனர்.

இந்நிலையில் மக்களையும் அவர்களுடைய விவசாய செய்கையினையும் பாதுகாத்துக் கொள்ள  விசேட டோச் லைற்களை வழங்குமாறு கேயார் நிறுவனத்திடம் வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா விடுத்த வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

அதனையடுத்தே தலா ஐயாயிரம் ரூபா பெறுமதியான 20 விசேட டோச் லைற்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாவற்கொடிச்சேனை,காந்திநகர்,பன்சேனை,உன்னிச்சை,நெடியமடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கே இன்று முதற்கட்டமாக விசேட டோச் லைற்கள வழங்கி வைக்கப்பட்டன.

இத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய பகுதி மக்களுக்கும் விசேட டோச் லைற்கள வழங்க தீர்மானித்துள்ளதாக டோச் லைறகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் வெ.தவராஜா தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கேயார் நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.ஜேசுசகாயம் மற்றும் கிராம சேவை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .