2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீருக்கு பிணை

Super User   / 2013 மே 02 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட முயற்சித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீர் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவியொருவரை கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த 30 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

இதனையடுத்து இவரை மே 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சார்பாக ஆட்கொணர்வு மனுவொன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதவான் என்.எம்.அப்துல்லாஹ், நகர சபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்தார்.

அத்துடன் முறைப்பாட்டாளரான மாணவியை ஏற்றிச்சென்ற வாகனத்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார். இதற்கு மேலதிகமாக குறித்த மாணவியை அச்சுறுததுவதோ அல்லது தலையீடு செய்யவோ கூடாது எனவும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீர் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் எம்.ஐ.ஏ. அஜ்மீர் நவாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் மே 7ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:


காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் நீதிமன்றில் சரண்

மாணவியிடம் தவறாக நடக்கவில்லை: எச்.எம்.பாக்கீர்
மாணவியிடம் பாலியல் சேஷ்டை: நகரசபை உறுப்பினரின் முன்பிணை மனு நிராகரிப்பு
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .