2026 மே 06, புதன்கிழமை

ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள் இருவர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 மே 02 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மீறாவோடை புளியடி ஆற்றின் அணைனக்கட்டின் மேல் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்த சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் காப்பாற்றி மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆலிம் வீதி மீறாவோடையைச் சேர்ந்த ஏ.எச்.றிவ்னாஸ் வயது (10) நஜிமுதீன் இல்கான் வயது(12) என்பவர்களே இவ்வாறு நீரில் தவறிவிழுந்துள்ளனர்.

மதிரீசாவிற்க்கு  இன்று மாலைஇருவரும் சென்று தொழுது விட்டு விட்டு விளையாட சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர்களுடைய பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எனினும் சிறுவர்களில்  ஒருவர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளதாகவும் அவரை காப்பற்றும் முயற்சியில்  ஆற்றில பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுவர்களில் ந.இல்கான் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .