2026 மே 06, புதன்கிழமை

சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 450 உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டன.

சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்திலிருந்து க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த 2012 தொடக்கம் 2014 கல்வியாண்டுக்கான மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு இக்கொடுப்பனவுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.

மாதமொன்றுக்கு 1,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு இக்கொடுப்பனவுகள் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .