2026 மே 06, புதன்கிழமை

'மூன்றாண்டுகளாக திருத்தப்படாத மாவடியோடை பாலம்'

Kanagaraj   / 2013 மே 03 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரீ.எல்.ஜவ்பர்கான்


பாலம் உடைந்து விழுந்து மூன்று  வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் திருத்தியமைக்கப்படாமையினால் அப்பகுதி வாசிகள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் மாவடியோடை பாலமே இவ்வாறு திருத்தப்படாமல் இருக்கின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக இப்பாலம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.இதன்காரணமாக இவ்வீதியினால் பயணம் செய்யும் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக வேறு சிறிய கிறவல் மாற்றுப்பாதையொன்றையே பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பாலத்தினூடாக சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தினமும் பயணம் செய்கின்றனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய கிறவல்வீதியால் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தடைவிதித்துள்ளது.

இதனால் நெல் அறுவடை காலங்களில் வாகனங்களில் தமது நெல்லினை எடுத்துச்செல்வதில்  விவசாயிகள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர்.

அது மட்டுமன்றி மழை காலத்தில் இச்சிறிய தற்காலிக வீதி சேதமடைந்து விடுவதால் இவ்வழிப்பாதையூடான  போக்குவரத்து முற்றாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தை உடனடியாக மீளமைத்து தருமாறு அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




  Comments - 0

  • vallarasu Friday, 03 May 2013 03:25 PM

    இப்போ அப்பகுதியில்தான் 3 அமைச்சர்மார் உள்ளனர். நித்திரைத்துரை அமைச்சர், காரியாலயம் இல்லாத அமைச்சர், தகடு வழங்கும் அமைச்சர், முன்னாள் சும்மா முதல் அமைச்சர்... அப்பா இவ்வளவு பேர் இருந்தும் இதை ஒருவரும் பார்க்கவில்லை என்றால், இதில் இலாபம் இல்லைபோல???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .