2026 மே 06, புதன்கிழமை

பன்றி அறுக்கும் மடுவம் அமைக்கப்படுவதற்கு ஆட்சேபம்

A.P.Mathan   / 2013 மே 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாநகர சபையால் ஆடு, மாடுகள் அறுப்பதற்காக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட மடுவம் இருக்கும் அதே இடத்திற்கு அருகில் பன்றிகளை அறுப்பதற்கான மடுவம் கட்டப்பட்டு வருவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விடயமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளரிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கோட்டைமுனை  மஸ்ஜிதுல் யூசுபிய்யா நிர்வாகத்தினர் மட்டக்களப்பு மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் ஆடு, மாடுகள் அறுப்பதற்காக முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்ட மாட்டு மால் கட்டிடத்துடன் ஒட்டியதாக தற்சமயம் பன்றிகள் வெட்டுவதற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த செயற்பாடானது முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது.

பொதுவாக மனித ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கின்ற பன்றியை இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது. அத்துடன் வேறு பல இடங்கள் இருக்கத்தக்கதாக வேண்டுமென்றே முஸ்லிம்களின் மாடு, ஆடுகள் அறுக்கும் இடத்தோடு ஒட்டியதாக பன்றி அறுக்கும் மடுவம் கட்டப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விடயமாக சம்பந்தப்பட்ட தரப்பாரிடம் ஏற்கெனவே பலமுறை ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது கவனத்திற்கொள்ளப்படாதது வருத்தமளிப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • vallarasu Sunday, 05 May 2013 05:04 PM

    என்ன அதிசயம் பாருங்கோ... நாட்டில் இதுவரை காலமும் வழங்காத அமைச்சு இருக்கும் போது நீங்கள் ஏன் அங்கு இங்கு போக வேண்டும். அவரால் இதைத் தடுக்க முடியாதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .