2026 மே 06, புதன்கிழமை

ஆரையம்பதி பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 மே 06 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்,-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆர்ப்பாட்டக்காரர்களினால் பூட்டுப் போட்டு மூடப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலகம் உடைத்து திறந்துவிடப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் கே.வாசுதேவனின் முன்னிலையிலேயே ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் பூட்டை உடைத்து திறந்துவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி (மண்முனைப்பற்று) பிரதேச செயலாளாரை இடமாற்ற வேண்டாமெனக் கோரி ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடமைக்குச் சென்ற பிரதேச செயலக அதிகாரிகளை செயலகத்துக்குள்ளே செல்ல விடாமல் கதவுகளை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன.

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட பெண்கள், பிரதேச செயலக கதவுகளை மூடிக் கொண்டும் சுலோகங்களை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 'ஆரையம்பதி பிரதேச செயலாளரை இடமாற்றக் கூடாது',  'நீதி நேர்மை உள்ள அரச அதிகாரியை இடமாற்றதே', 'எமது பிரதேச செயலாளரை இடமாற்றதே', 'அரசாங்க அதிகாரிகளை நேர்மையாக கடமையைச் செய்ய விடு', 'அரசியல் பழிவாங்காதே', 'மாற்றாதே, மாற்றாதே பிரதேச செயலாளரை இடமாற்றதே' போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

ஆரையம்பதி பிரதேச செயலாளராக கடமையாற்றும் திருமதி வாசுகி அருள்ராசாவுக்கு இடமாற்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .