2026 மே 06, புதன்கிழமை

வாகன விபத்தில் இருவர் காயம்

Super User   / 2013 மே 06 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.சக்திவேல்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பலத்த காயங்களுக்குள்ளான இவர்கள் இவருவரும் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பபயணித்துக் கொண்டிருந்த ஒருவரை பின் தொடர்ந்து வந்த இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் முந்துவதற்கு முற்சித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .