2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடியில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையின்போது காணாமல் போன, பழுதடைந்த தேசிய அடையாள அட்டை மற்றும் புதிததாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

மேலும் இறப்பு, பிறப்பு மற்றும் விவாகப் பதிவுகளுக்கான சான்றிதழ்களும் உடனடியாக வழங்கப்பட்டன.

காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கோமலேஸ்வரன், கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .