2026 மே 06, புதன்கிழமை

வட, கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள்: பொன். செல்வராசா

Super User   / 2013 மே 08 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சசிகுமார்

"தமிழ் மக்கள் எதை பாதுகாக்கப் போராடினோமோ இன்று சமாதான காலத்தில் அதனை இளந்து வருகின்றோம். வடக்கு, கிழக்கான தமிழ் மக்களின் தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களினுடாக காணிகள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

வவுணதீவுப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செல்வராசா எம்.பி, அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் பனையறுப்பான கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு பிளாஸ்ரிக் கதிரைகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறையில் இருந்து மீட்சிபெறவும் எமது உரிமைகளை வென்றெடுக்கவும் எமது தலைவர்கள் அஹிம்சை வழியில் போராடி எந்த வித அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.

அந்தப் போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 65 வருடங்களுக்கும் மேலாக எதனைப் பாதுகாக்க நாம் போராடினோமோ அதனை இன்று சமாதான காலத்தில் இழந்து வருகின்றோம். குறிப்பாக வட கிழக்கு எமது தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களினுடாக காணிகள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, வலிகாம் கிழக்குப் பகுதியில் சுமார் 6400 ஏக்கர் சொந்தக் காணிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் தமிழ் மக்களது காணிகள் அத்துமீறிப் பிடிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. படுவாங்கரை பகுதியில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி குடியேறி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் மேச்சல் தரைகளையும் சொந்தக் காணிகளையும் இளக்க வேண்டி ஏற்றபட்டுள்ளது. இக்காணிகளைப் பாதுகாக்க அப்போது ஆட்சியில் இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் பெரும்பான்மை மக்களுக்கு வேலி அமைத்துக் கொணடுக்கப்பட்டது. தற்போது இராணுவ முகாம், கடற்படை முகாம் விரிவாக்கத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அரச, தனியார் காணிகள் உட்பட சுமார் 1600 ஏக்கர் காணிகள் சுவிகரிக்கப்பட இருக்கின்றது.

இந்நிலையில் படுவாங்கரையில் உள்ள மக்கள் தங்களது காணிகளைப் பாதுகாக்கவேண்டியவர்களாக இருக்கின்றீர்கள் தங்களது வளம் பொருந்திய காணிகளை துப்பரவு செய்து பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும்.போராட்டத்தின் வலியையும் வேதனையையும் இளந்த மக்கள் நீங்கள் அதனுடாக பல கஸ்ரங்களை மாத்திரமன்றி உயிரையும் சொத்துக்களையும் இளந்து நிர்க்கதியான நிலையில் இடம்பெயர்ந்து எந்தவித பொருளாதாரமும் இன்றி மீள்குடியமர்த்தப்பட்ட உங்களுக்கு இந்த அரசாங்கம் எந்தவித நிவாரணங்களையும் வழங்கவில்லை.

உங்களது அயராத முயற்சியினால் மீண்டும் முன்நேறி வருகின்றீர்கள் நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும்.
எத்தனை யுத்தம் வந்தாலும் அழிக்க முடியாத சொத்து கல்விச் சொத்து மாத்திரமே அந்த சொத்தை உங்களது பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் கல்வி எம்முடினே வரும் செல்வம் அதனை உங்களது பிள்ளைகளுக்கு வழங்குங்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .