2026 மே 06, புதன்கிழமை

போரதீவு - முனைத்தீவு போக்குவரத்து தடை

Super User   / 2013 மே 08 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவிலிருந்து முனைத்தீவு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மரம் ஒன்று முறிந்து விழுந்தத்தினால் இந்த வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இவ்வீதியின் அருகே நின்ற பனை மரம் ஒன்று முறிந்து அருகிலிருந்த மின் கம்பத்தில் விழுந்துள்ளதனால் மின்கம்பமும் உடைந்து வீதியில் விழுந்தள்ளது.

இதனால் இப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இந்த வீதியினை பயன்படுத்தம் பொதுமக்கள மாற்று வீதியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதியின் குறுக்காக கிடக்கும் மரத்தினை அகற்றுவதற்கு கிராமத்து பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மின்சாரத் தடை சம்மந்தமாக களுவாஞ்சிகுடி மின்;சார பாவனையாளர் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .