2026 மே 06, புதன்கிழமை

சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களிலிருந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களிலிருந்து 2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் திரட்டப்பட்டு வருகின்றன.

சமுர்த்தி ஆணையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு ஏற்ப, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்தத் தகவல்களை திரட்டி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.

சமுர்த்தி உணவு முத்திரை பெறுபவர்களின் பெயர், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம், தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் பெயர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள இலக்கம், ஏற்கெனவே சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் பெறப்பட்டுள்ளதா என்பன போன்ற விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .