2026 மே 06, புதன்கிழமை

முறுகல் நிலையை தோற்றுவிக்க முற்படக் கூடாது: மாகாண கட்டளைத் தளபதி

Super User   / 2013 மே 09 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கும் மக்களின் இயல்பு நிலையை குழப்புவதற்கும் யாரும் முற்படக் கூடாது என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடுப்பிலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி தலைமையிலான படை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை சித்தாண்டியிலுள்ள 234ஆவது இராணுவ முகாமில் நடைபெற்றது.

இதன்போதே கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மக்களின் இயல்பு நிலையை குழப்புவதற்கும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கும் யார் முயற்சிக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.பயங்ரவாதத்துக்கு தூபமிடும் வகையில் அஸாத் சாலி செயற்பட்டதால் தான்; அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் யார் செயற்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த அடிப்படையிலேயே அஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை பேணி பாதுகாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரு சமூகத்தை பாதிக்கும் எந்தவொரு காரியத்தையும் யாரும் செய்வதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறான சந்திப்புக்களை தொடர்ந்து நடாத்தி ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும்"என்றார்.

இந்த சந்திப்பில் காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களின் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநதிகள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .