2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூரிலுள்ள பாடசாலையொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திலிருந்து கணினியும் அதன் உதிரிப்பாகங்களும் தொலைபேசியும் கூரை வழியாகப் புகுந்து திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வுழமை போன்று இன்று வியாழக்கிழமை காலை பாடசாலைக்கு வந்தபோது பாடசாலையின் அறை திறந்து காணப்பட்டதாக அப்பாடசாலையின் பிரதி அதிபர் கே.ரோஹினி தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் எம்.நஜிமுதீன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .