2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் சட்டவிரோத சகிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

A.P.Mathan   / 2013 மே 11 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசங்களில் மாவட்ட மதுவரி அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல்களின்போது பல கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தெரிவித்தார்.
 
மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையில் பலாச்சோலை, காக்காச்சிவெட்டை, காஞ்சிரங்குடா, தொயிலாமுனை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களிலிருந்து 180 லீற்றர் கோடா மற்றும் பெருமளவு கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .