2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடியில் கைகலப்பு: மூவர் காயம்

Kanagaraj   / 2013 மே 11 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் இன்று இடம் பெற்ற கைகலப்பில் மூன்று பேர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள காணியொன்றில் காத்தான்குடி நகர சபை கட்டிடமொன்றை அமைப்பதற்காக அந்தக்காணியை அடைத்து வேலி போட்டுக்கொண்டிருந்தது.

குறித்த காணி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்கு சொந்தமான மைய வாடிக்காணியென கூறி அந்தப்பள்ளிவாயலின் ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் காத்தான்குடி நகர சபையினால் போடப்பட்ட வேலியை உடைத்ததுடன் அங்கு போடப்பட்ட தூண்களையும் பிடிங்கியுள்ளனர்.

இதையடுத்து  இவ்விடத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் 3பேர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸாரும் இராணுவத்தினரும் நிலைமையை கட்டு;பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 



  Comments - 0

  • vallarasu Sunday, 12 May 2013 03:28 PM

    நகர சபை உருப்பினர்களும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள்தானே... அப்படியானால் அவர்களுக்குத் தெரியாதா? கடந்த மாதம் இதே ஊரில், பள்ளிக்குள்ளே பிரச்சினை, இப்படிப்பட்ட பிரச்சினையால்த்தான் ஒட்டு மொத்த முஸ்லிகளும் பாதிக்கப்படுகிறார்கள்... உ+ம்.. இலங்கையில் ஹலால் பிரச்சினைக்குக் காரணம் யார்? நமது ஜம்மியத்துல் உலமா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .