2026 மே 06, புதன்கிழமை

கடல் அட்டை ஏற்றிச் சென்றவர் கைது

Super User   / 2013 மே 12 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


சட்டவிரோதமாக கடல் அட்டையை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

காவத்தமுனை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டபோது முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் கொழும்புக்கு அனுப்பப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகலொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ்  பரிசோதகர் ஏ.ஜி.புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் காவத்தமுனைப் பிரதேசத்தில் வைத்து கடல் அட்டைகள் ஏற்றப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .