2026 மே 06, புதன்கிழமை

திராய்மடுப் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், சசி குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடுப் பகுதியில் ஆயுதங்கள் சிலவற்றை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

திராய்மடு, சுவிஸ் கிராமம் எப் வலய காட்டுப் பகுதியிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ஜேர்மன் தயாரிப்பிலான 2 கைக்குண்டுகள், ரீ 56 ரக 60 தோட்டாக்கள், 2 மெகசீன்கள் ஆகியவையே மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டப்பட்ட பனை மரமொன்றின் நடுப்பகுதியில் இந்த ஆயுதங்கள் பொலித்தீனினால் சுற்றிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற  மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள இந்த  ஆயுதங்களை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதாகவும் இவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .