2026 மே 06, புதன்கிழமை

வாகரை பிரதேச கடலில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிப்பதால் தங்களது தொழிலில் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச கடலில் வெளிமாவட்டங்களைச்; சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிப்பதால் தங்களது அன்றாட மீன்பிடித் தொழில்; மாத்திரமின்றி, கரைவலை மீன்பிடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  கதிரவெளி மீன்பிடிச் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்;கள் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் புச்சாக்கேணி என்னும் இடத்தை தளமாகக் கொண்டு தொழில் புரிந்து வருகின்றனர். இவர்கள் சிலின்டர் மற்றும் சக்திவாய்ந்த டோர்ஜ்லைட் போன்றவற்றை பயன்படுத்துவதால் அன்றாடம் கரையோரத்தை நாடும் கல் மீன்கள், சிங்கி இறால், மற்றும் சிறிய மீன் இனங்களை பிடிப்பதில் சிரமம் காணப்படுகின்றன. இதனால் கரையை நாடும் மீன் இனங்களும் கலைக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

இதனை தடுக்கும் முகமாக பிரதேசத்தின் 5 சங்கங்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தும் பலனின்றி போயுள்ளது.  இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கதிரவெளி மீன்பிடிச் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .