2026 மே 06, புதன்கிழமை

சர்வதேச தாதியர் தினம்

A.P.Mathan   / 2013 மே 13 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
 
சர்வதேச தாதியர் தினம் நேற்றாகும். இதனையொட்டி நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
 
தாய்க்கு பின்னர் அதிகமாக நேசிக்கப்படும் ஒருவராக தாதியுள்ளார். அதனை கௌரவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
 
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
 
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்களினால் தாதியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
 
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
 
இதன்போது சிறுவர்களுக்கான பல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதுடன் வறுமை நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவோருக்கு ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டன.
 
அத்துடன் புற்றுநோய்க்குள்ளாகி சிகிச்சைபெற்றுவரும் நோயாளியின் குடும்பத்தினருக்கு வைத்திய அத்தியட்சர் சுகுணனின் ஆலோசனையின் கீழ் ஒரு தொகை பணம் தாதியர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
 
தாதியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவோருக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வும் நேற்று காலை இடம்பெற்றதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .