2026 மே 06, புதன்கிழமை

'கைதிகளிடையே இளைஞர் கழகம்'

Super User   / 2013 மே 13 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
கைதிகளிடையே இளைஞர் கழகங்கள் அமைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
இளைஞர் விவககார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் பேரில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இளைஞர் கழகம் அமைக்கும் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.
 
மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி அதிகாரி கே.சிறீனிவாசன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா மற்றும் சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிநி பண்டார உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகளில் 29 வயதிற்குட்பட்டோர் இந்த இளைஞர் கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களிலிருந்து இளைஞர் கழகத்திற்கான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .