2026 மே 06, புதன்கிழமை

சுழல் காற்றுக் காரணமாக மூவர் காயம்

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை வீசிய சுழல் காற்றுக் காரணமாக மட்டக்களப்பு மண்முனைப்பற்று மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வீட்டின் மேல் மரம் விழுந்தும் மற்றும் வீடுகளின் கூரை ஓடுகள் விழுந்துமே இவர்கள் காயமடைந்துள்ளனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்தின் கிரான் பகுதியிலுள்ள வீடொன்றின்மீது மரம் விழுந்ததால் அதில் வசித்து வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

வைரமுத்து வாசன் (44) என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர், தற்போது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, வெல்லாவெளி பிரசேத்திலுள்ள பலாச்சோலை மற்றும் பாலையடி வேட்டை ஆகிய பகுதிகளில் வீடுகளின் கூரைகளில் உள்ள ஓடுகள் விழுந்ததால் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும்; களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .