2026 மே 06, புதன்கிழமை

சாரதா பாலர் பாடசாலை பாலர் அபிவிருத்தி நூல் வெளியீட்டு விழா

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
 
மட்டக்களப்பு கல்லடி ராமகிருஸ்ணமிசன் சாரதா பாலர் பாடசாலை பாலர் அபிவிருத்தி நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
 
பாடசாலையின் அதிபர் திருமதி இந்திராணி புஸ்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசியுரையினை மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் பொறுப்பாளர் சுவாமி கபாலிசனந்தாஜீ மகராஜ் வழங்கினார்.
 
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபாஜினி சக்கரவர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வலய பாலர் கல்விப் பொறுப்பாளர் எம்.புவிராஜ், முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இவ் நூல் வெளியீட்டு விழாவில் பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் நடைபெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .