2026 மே 06, புதன்கிழமை

ஐ.நா தீர்மானத்தை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்குமா?: பொன். செல்வராசா

Menaka Mookandi   / 2013 மே 19 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

'யுத்தத்தை மறக்க வேண்டும் என்று அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ள வேளையில் அரசாங்கம் போரின் வெற்றியைக் கொண்டாடுகின்றது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார்களா?' என்று மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கேள்வி எழுப்பினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் 4ஆம் ஆண்டு நிறைவு அஞ்சலியும், ஆத்மசாந்தப் பிரார்த்தனையும் மட்டக்களப்பு நகர தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நான்கு ஆண்டுகள் நிறைவையொட்டி 4 நினைவுச் சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் ஆத்மசாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து உரையாற்றிய பொன். செல்வராசா எம்.பி, மேலும் தெரிக்கையில், 'அரசு மட்டக்களப்பு மாவட்டத்தில் சொந்தக் காணிகளை சுவீகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 1600 ஏக்கர் காணிகள் பறிபோகக் கூடிய நிலையிலுள்ளது. போர்க்காலத்தில் இல்லாத இராணுவ முகாங்களும் செயல்களும் இப்போது நடைபெறுகின்றன.

சமாதான காலத்தில் இவ்வளவு இராணுவம் தேவையில்லை. ஜனாதிபதியினால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அரசு அமுல்படுத்த முடியாத நிலையிலுள்ளது' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், 'நாடாளுமண்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரத்தினம், கி.துரைராஜசிங்கம், இந்திரக்குமார் பிரசன்னா, மா.நடராசா, கோ. கருணாகரம் (ஜனா), வெள்ளிமலை, கலையரசன், உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .