2026 மே 06, புதன்கிழமை

பயிற்றுநர்களுக்கான பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான முன்பள்ளிகளுக்கான முயற்சியானது மாகாண முதலமைச்சர், ஆளுநர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றது. முதன் முறையாக நடைபெறும் முன்பள்ளிப் பாடசாலையினருக்கான முயற்சியைப் பாராட்ட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சத்துருக்கொண்டானில் நடைபெற்ற முன்பள்ளிப் பாடத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கான பயிற்றுநர்களுக்கான பயிற்சிநெறியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முன்பள்ளிப் பருவ அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் கீழ் பயிற்றுநர்களுக்கான பயிற்றுவிக்கும் பயிற்சிநெறி ஆரம்பமானது.

பிளான் சிறிலங்காவின் அனுசரணையில், மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய கல்வி அபிவிருத்தி வள நிலையத்தில் இன்று ஆரம்பமான இப்பயிற்சிநெறி எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .