2026 மே 06, புதன்கிழமை

வவுணதீவு இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிப் பட்டறை

Menaka Mookandi   / 2013 மே 19 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். சசிகுமார்


சிறுவர் நிதியத்தின் வவுணதீவு அபிவிருத்தி நிறுவகத்தினால் வவுணதீவுப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் அதனை செப்பனிடல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை இடம்பெற்று வருகின்றது.

வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் சிறுவர்களுக்கான அனுசரணை வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமங்களில் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்தல் அவர்களது பிரச்சினையினை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தல் இளைஞர் யுவதிகளது தொழில் மேம்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் கட்டப் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மூன்று நாள் வதிவிடப் பயிற்சியாக இடம்பெற்று முடிவுற்ற நிலையில் மூன்றாங்கட்ட படம் தயாரித்தல் பயிற்சி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்றாம்கட்ட படம் தயாரித்தல் களப்பயிற்சியானது வவுணதீவுப் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதாக வவுணதீவு அபிவிருத்தி நிறுவகத்தின் திட்ட இணைப்பாளர் கே.கஜன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .