2026 மே 06, புதன்கிழமை

பொலிஸ்- காணி அதிகாரங்களை நீக்குவதற்கு அனுமதிக்கமுடியாது: எம்.எஸ்.சுபைர்

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித்


'அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்குவதற்கு ஒருபோதும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது' என்று கிழக்கு மாகாணசபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர் கூறினார்.

ஏறாவூர் அந்-நஸ்ல் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளைஞர் கலை, கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இளைஞர் கழகத் தலைவர் ஐ.எம்.பாஸில் தலைமையில் ஏறாவூர் மட்ஃஅறபா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தற்போது வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுவது தொடர்பான அறிவித்தல்கள் வெளியான சந்தர்ப்பத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் திட்டங்களை தீட்டிவருகின்றனர்.

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக கொண்டுவரப்பட்ட கிழக்கு மற்றும்; வட மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு பெறும்பான்மை சமூகத்தவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு திரிவதை அவதானிக்க முடிகின்றது' என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஏறாவூர் நகர சபை நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா, பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், இளைஞர் சேவை மன்ற அதிகாரி ஜே.கலாராணி உட்பட பிரதேச பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் அந்-நஸ்ல் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளைஞர் கலை கலாசார போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் இதன்போது அதிதிகளால் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .