2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கான செயலமர்வு நிறைவு

Suganthini Ratnam   / 2013 மே 20 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் கீழ் உள்ளீர்க்கட்ட பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பயிற்சிச் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளரும் பணியகத்தின் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரண்தெனிய தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிச் செயலமர்வில் மட்டக்களப்பு,  அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து 90 பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்கான இப்பயிற்சி செயலமர்வு ஆரம்பமாகியிருந்தது.

இறுதி நாள்  பயிற்சிச் செயலமர்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளரும் பணியகத்தின் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரண்தெனிய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரி எம்.நிருத்பவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வெளிநாடு செல்வோரின் குடும்ப நலன், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி போன்ற விடயங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் கீழ் உள்ளீர்க்கப்பட்ட இப்பட்டதாரிகள் பிரதேச செயலகப் பிரிவுகள் மூலமாக கண்காணிப்பார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளரும் பணியகத்தின் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரண்தெனிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .