2026 மே 06, புதன்கிழமை

கடல் அட்டை பிடிக்கும் பிரச்சினை தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது: ஜோர்ஜ்

Suganthini Ratnam   / 2013 மே 20 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசக் கடலில்  கடல் அட்டைகளை பிடிப்பதற்காக வெளியூர் மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு உள்ளூர்; மீனவச் சங்கங்கள் தெரிவித்துவரும் எதிர்ப்புகள் தொடர்பில்  மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில்த்துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
 
வாகரை பிரதேச கடலில் வெளியூர் மீனவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதினால் கரைவலை மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுவதாக உள்ளூர்; மீனவச் சங்கங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.
 
மேலும்,  கடல் அட்டை பிடிப்பதற்காக சட்ட ரீதியாக  வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் வகையில்  கடல் அட்டை பிடிக்கும் மீனவர்கள் செயற்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தினால் கடல் அட்டைகள் பிடித்தல் உட்பட 17 வகையான மீன் இனங்களை பிடிப்பதற்கு  அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில்துறை உதவிப் பணிப்பாளர்
எஸ்.ரி.ஜோர்ஜ் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .