2026 மே 06, புதன்கிழமை

'முகாமைத்துவ நடைமுறைகள், அரச தாபன நடைமுறைகள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


பொலிஸ் திணைக்கள மட்டக்களப்பு அம்பாறை சிரேஸ்ட கணக்காளர் ஏ.ரவீந்திரன் எழுதிய முகாமைத்துவ நடைமுறைகள், அரச தாபன நடைமுறைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்றது.

அரிமா சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் அரிமா ஜீ,சுகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, சிறப்பு விருந்தினராக மட்டப்பளப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் இந்திரன், கௌரவ விருந்தினர்களாக இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஜனாப். க.மு.மு.செரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ் நூல்களின் நயவுரைகளை உயர் தேசியக் கற்கைகள் நிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன், மட்டக்களப்பு இறைவரித்திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.கணேசராஜா, ஆகியோர் நிகழ்த்தினர்.

சிறப்புரைகளை கிழக்குப் பல்கலைகழக விரிவுரையாளர் திருமதி பாரதி கென்னடி, மட்டப்பளப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் இந்திரன் உள்ளிட்ட பலரும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியக் கலாசாலையின் கேட்போர் கூடத்தின் அரங்குக்கான சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான திரைச்சீலை நூலாசிரியரும் பொலிஸ் திணைக்கள மட்டக்களப்பு அம்பாறை சிரேஸ்ட கணக்காளருமான ஏ.ரவீந்திரனால் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .