2026 மே 06, புதன்கிழமை

போலி சிகரெட்டுக்கள், கஞ்சா வைத்திருந்த எழுவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 20 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜௌபர்கான்

700 இற்கும் அதிகமான போலி சிகரெட்டுக்களையும்  5 கிராம் கஞ்சாவையும் வைத்திருந்த 7 பேர்  அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை, சாய்ந்தமருந்து, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போலி சிகரெட்டுக்களை வைத்திருந்தவர்களிடமிருந்து தண்டம் அறவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 400 இற்கும் மேற்பட்ட போலி சிகரெட்டுக்களை வைத்திருந்த ஒருவரிடமிருந்து 25,000 ரூபா தண்டமும்; 200 போலி சிகரெட்டுக்களை வைத்திருந்த ஒருவரிடமிருந்து  15,000 ரூபா தண்டமும் குறைந்தளவிலான சிகரெட்டுக்களை வைத்திருந்த ஏனைய 4 பேரிடமிருந்து  5,000 ரூபா தண்டமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

கஞ்சா வைத்திருந்தவரை கல்முனை நீதிமன்றத்தில் இன்றையதினமே ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .