2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பு விமானப்படை பொறுப்பதிகாரி இடமாற்றம்

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு விமானப்படை பொறுப்பதிகாரி வின்கொமாண்டர் டபிள்யு.எம்.ஏ.வி.அஜித் வெவகம இடமாற்றம்பெற்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு செல்லவுள்ளார்.

இவருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆ பள்ளிவாயலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பள்ளிவாயலின் தலைவர் எம்.பி.எஸ்.முகம்மட் மற்றும் அதன் உப தலைவர் எம்.இக்பால், செயலாளர் எம்.எஸ்.ஸாலி, பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.ஐ.எம்.நழீம், மட்டக்களப்பு விமானப்படை சிவில் தொடர்பாடல் அதிகாரி ஏ.பி.எம்.அன்சார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இன நல்லுறவுக்காக பாடுபட்டமைக்காக மட்டக்களப்பு விமானப்படை பொறுப்பதிகாரி வின்கொமாண்டர் டபிள்யு.எம்.ஏ.வி.அஜித் வெவகமவுக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தினால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .