2026 மே 06, புதன்கிழமை

கிழக்கு மாகாண எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
, சிங்காரவேலு சசிக்குமார்

கிழக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணசபையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த அமர்வின்போது எதிர்க் கட்சியினருக்கு எந்தவிதமான அறிவித்தலும் கொடுக்காமல் கிழக்கு மாகாண சபையை அடுத்த மாதம் 18ஆம் திகதிவரை தவிசாளர் சபையை ஒத்தி வைத்துள்ளார்.

தவிசாளரின் இந்த செயற்பாட்டினை கண்டித்தும் மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .