2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதன் செயற்பாடு குறித்தும் ஆராயும் கூட்டம் நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுச் செயலாளர் எஸ்.எம்.மீரா முகைதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தற்போதைய பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், தேசிய காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.நஸீர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் கொள்கைபரப்பு செயலாளர் எம்.ஹனிபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கல்முனை ஆரஞ்சு தனியார் கம்பனி உரிமையாளர் கே.எல்.எம்.நாஸரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் நிதி மாகாண வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அக்காசோலை  வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.ஏ.சி.பளீலிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, பிரதித் தவிசாளர் வைத்தியசாலையின் புதிய கட்டிட நிர்மாண வேலைகளையும் வைத்தியசாலையின் சிறுவர் விடுதியினையும் பார்வையிட்டதோடு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளுக்கு போசாக்கு நிறைந்த பால்மாக்களையும் வழங்கிவைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .