2026 மே 06, புதன்கிழமை

மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் மீட்பு

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிகலை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள்  மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  விஜயம் செய்த  புலனாய்வுப் பிரிவினர் மேற்படி மருத்துவ  உபகரணங்களை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .