2026 மே 06, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷிட், க.ருத்திரன்


வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மட்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு சொந்தமான முச்சக்கரவண்டியும் வாழைச்சேனை இ.போ.சவுக்கு  சொந்தமான பஸ்ஸொன்றும் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பாடசாலையின் ஆசிரியரான எஸ்.கோமராஜன் (வயது- 30) என்பவர்  ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

இதேவேளை, பாடசாலையின் சிற்றூழியரான மார்க்கண்டு அகிலன் (வயது 30) என்பவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .