2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் நகரசபையின் ஸ்ரீ.மு.க. உறுப்பினர் ஏ.ஆர்.பிரௌஸ் நிதிக்குழுவிலிருந்து நீக்கம்

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.பிரௌஸ் அச்சபையின் நிதிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இம்மாத சபை அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு அறிவிக்கப்பட்டு;ள்ளது.

தவிசாளர் அலிஷாஹிர் மௌலானவின் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில் குறித்த உறுப்பினருக்கு எதிராக உறுப்பினர் ஜ.ஏ.வாசித் முன்மொழிந்த கண்டனத் தீர்மானத்தை சபை ஏகமனதாக அங்கிகரித்தது.

இதனடிப்படையில், ஏறாவூர் நகரசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.பிரௌஸ் அச்சபையின் நிதிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இப்பிரேரணை மீதான உரையின்போது  உறுப்பினர் ஜ.ஏ.வாசித் தெரிவிக்கையில்,

'ஏறாவூர் நகரசபை தகுதியான நேர்மையான தவிசாளர் தலைமையில் இயங்குகிறது. இவ்வாறன நிலையில் ஆதாரமற்ற அடிப்படை இல்லாத கருத்துக்களை அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; உறுப்பினர் ஏ.ஆர்.பிரவுஸ் வெளியிட்டுள்ளார்.

நிதிக்குழுவின் உறுப்பினரான இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். சபை ஊழியர்களுடன் முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளார். எனவே எனது கண்டனத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார்.

இச்சபை அமர்வில் பிரதி தவிசாளர் எம்.ஜ.எம்.தஸ்லிம்,  உறுப்பினர்களான எம்.எல்.ஏ.லத்தீப், எம்.எல்.றெபுபாசம், அமின் இஸ்ஸாம், பூ.சசிதரன் ஆகிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .