2026 மே 06, புதன்கிழமை

வவுணதீவில் வெடிபொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்பொடி சசிகுமார், க.ருத்திரன்,தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னக்காலபோட்டமடு கிராமத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் சில நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.

வவுணதீவு பொலிஸாரும் தாண்டியடி விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

சின்னக்காலபோட்டமடு  கிராமத்தில் பற்றைக் காட்டுப் பகுதியிலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

82 ரக கைக்குண்டுகள்  3, ரி 56 ரக தோட்டாக்கள் 150, மகஸின்கள் 4, மிதிவெடிகள் 5, கோல்சர் 1 மற்றும் எண்ணெய்க் கான்  1 என்பன மீட்கப்பட்டுள்ளதாக  வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். (படம்: மாணிக்கப்பொடி சசிகுமார்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .