2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இந்து ஆலயங்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவேன்: கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா இராணுவத்திற்கு ஆசி வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்த வழிபாடுகளையடுத்து, மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாகிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியங்களின் பிரதி நிதிகளையும் சந்தித்தனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அதேநேரம், விரைவில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் இந்து ஆலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட விரும்புவதாக கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா நிருவாகிகள், பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதன் போது, மின்னேரியிலுள்ள பிரிக்கேட் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேணல் மஞ்சுள ரத்நாயக்க, கஜபா றெஜிமென்ரின் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி கேர்ணல் பிரியந் ஜித் உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இவ் வழிபாட்டின் போது,  கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் இந்து முறைப்படி வழிபாடுகளில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமவாசைத் தீர்த்தோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையிலேயே இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா இந்த வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது, மாமாங்கேஸ்வர் ஆலய பரிபாலன சபைத் தலைவர்  எஸ்.அகிலன், செயலாளர் மற்றும் நிருவாகிகள், விஸ்வ ஹிந்து பரிசத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் வி. கமலதாஸ், மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் ஜீ. துரையப்பா, செயலாளர் சி.புஸ்பலிங்கம், துறவியான சுவாமி மகேஸ்வர சயித்தன்ய, இந்து சேவா சங்கத்தின் எஸ். சுதர்சனன், முதலைக்குடா ஸ்ரீ விக்னேஸ்வரா ஆலய பரிபாலன சபையின் சி.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X