2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாநகர சபையின் செயற்பாடுகள் மக்களுக்குச் சென்றடையும் விதம் குறித்து ஆராயும் கூட்டம் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு பாடுமீன் வீடுதியில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையில் மக்கள் பயனைப் பெறும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் முன்வைத்த அதேவேளை மாநகர சபையின் செயற்பாடுகளின் போதும் சேவை வழங்கும் போதும் மாநகர சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மாநகர சபையும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலின் போது மாநகர சபையின் செயற்பாடுகளை வினைத்திறன்மிக்கதாக மாற்றி அதன் மூலம் பொது மக்கள் உச்சப்பயனை பெற்றுக் கொள்ளல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்த காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் நடைபெற்றுவரும் நகர அழகுபடுத்தும் வேலைத் திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாநகர சபையில் தொதுமக்கள் சேவையினைப் பெற்றுக்கொள்ளும் போது எதிர்கொள்ளும் சில நிர்வாக ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் மாநகர சபையில் உள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை உரிய தரப்பினரிடம் கொண்டுசென்று நிவர்த்தி செய்வதெனவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் காலை 9.00மணி முதல் பிற்பகல் 3.00மணி வரை இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் துஸால் விதானகே, திட்ட அலுவாகர் ருக்மன் சில்வா ,மாநகர ஆணையாளர் எம்.சிவநாதன், மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராசா, உட்பட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X