2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடலில் தத்தளித்த சிறுமி காப்பாற்றப்பட்டார்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித் ,க.ருத்திரன்


பாசிக்குடா கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை கல்குடா பொலிஸ் கடல் வலய பாதுகாப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று  வெள்ளிக்கிழமை காலை  9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செபமாலை மாதா கோயில் வீதி பெரிய கல்லாற்றைச் சேர்ந்த தேவதாசன் தமிழினி வயது (11) என்ற சிறுமியே இவ்வாறு உயிர் காப்பாற்றப்பட்டார்.

மேற்படி பிரதேசத்தின் பங்கு குருவானவரின் உதவியுடன் 20 பேர் கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும், சில பெற்றோர்களும் பாசிக்குடா கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போது குறித்த சிறுமியின் பெற்றோர்கள் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி குளித்துக் கொண்டிருக்கும்போது கடலின் ஆழமான பகுதியில் கால் எட்டாமல் போனதால் அபயக் குரல் கேட்டு உடனடியாக இதற்கென ஏறகெனவே இப்பகுதியில் இவ்வாறான விபத்துக்களை தடுக்க நியமிக்கப்படடடிருந்த விசேட பொலிசாரினால் காப்பாற்றப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டு  தேக ஆரோக்கியம் வழமையான நிலைக்கு திரும்பியவுடன்  குறித்த குருவானவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X