2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வசதி குறைந்தவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,க.ருத்திரன்.


குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த ஒருதொகுதி மக்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள பொதுநூல் நிலைய கேட்போர்கூடத்தில் மட்/திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளரும் சமூக மேம்பாட்டுமையத்தின் தலைவருமான திருவாளர்.க.ஞானரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இதில்  பிரபல தொழிலதிபர்  கிருஸ்ணபிள்ளை (சுதா) மற்றும்  ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய திருவருள் ஆண்கள் சங்க தலைவர் திருவாளர். க.நவரெத்தினராசா ,திருவருள் ஆண்கள் சங்க உபதலைவரும் ஆலய பூசகருமான நா.சோமேஸ்வரம் ,செட்டிபாளையம் சிவனாலய குரு சிவஸ்ரீ.மு.சுந்தரம்பிள்ளை ,ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய திருவருள் ஆண்கள் சங்க செயலாளர்  சி.சதானந்தம் ,சமூக மேம்பாட்டுமைய செயலாளர் சா.துவாரகன் மற்றும் திருவருள் சங்க உறுப்பினர்கள் ,கிராம மக்கள் போன்றோர் கலந்துகொண்டு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தனர். 

இவ்வைபவத்தில் காகவத்தைமுனை, ஓட்டமாவடி ,வாழைச்சேனை, மயிலம்பாவெளி, மட்டக்களப்பு அமிர்தகழி, கூழாவடி ,வீச்சுகல்முனை, புதூர், பருத்திச்சேனை ,கரவெட்டி நெல்லிக்காடு ,கிரான்குளம் செட்டிபாளையம் ,களுவாஞ்சிகுடி ,ஓந்தாச்சிமடம் ,காக்காச்சிவட்டை ,திக்கோடை பாலையடிவட்டை ,பழுகாமம் ஆகிய ,டங்களைச்சேர்ந்த வசதி குறைந்த ஒருதொகுதி பல் இன மக்கள் கலந்து கொண்டு மூக்குக்கண்ணாடிகளை பெற்றுக்கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X