2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆயித்தியமலை - வவுணதீவு பிரதான பாதையின் புனரமைப்பு பணி பூர்த்தி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை - வவுணதீவு பிரதான பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த செப்டெம்பர் மாதம்  இப்பாதை திறந்துவைக்கப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட வதிவிட பொறியியலாளர் கே.பிரேமதாச தெரிவித்தார்.

யுத்தம் மற்றும் வெள்ளப்பெருக்காலும் இப்பாதை முற்றாக சேதமடைந்திருந்த நிலையிலேயே இப்பாதைக்கான புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

10 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட ஆயித்தியமலை - வவுணதீவு பிரதான பாதை ஆசிய அபிவிருத்தி வங்கியின் 250 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆயித்தியமலை - வவுணதீவு பிரதான பாதைக்கான புனரமைப்புப் பணிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆயித்தியமலை - வவுணதீவு பிரதான பாதை புனரமைப்பின் மூலம் விவசாயிகளே அதிக நன்மையடைவரென எதிர்பார்க்கப்படுகின்றது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X