2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இவ் வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடத்திலிருந்தாவது நிரந்தர மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான விரைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஆரம்ப பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கை நூல் வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இப் பாலர் பாடசாலைப் பணியகத்தினை நாங்களும் முன்நோக்கோடு செயற்படுத்தி வருகிறோம். எமது மாகாணத்தில் 59ஆயிரம் சிறார்களுக்கு கல்வி ஊட்டி வருகிறோம். 1800 பாலர் பாடசாலைகள் இருக்கின்றன.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருங்காலத்திற்கான சிறந்த தலைவர்களை உருவாக்குகின்ற சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளோம்.

எமது இளம் சிறார்களை சமூகத்தில் சிறந்த முறையில் உருவாக்குகின்ற கடமை ஆசிரியர்களுக்குரியது.

இப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்தி, அறிவை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளிலே பேராசிரியர்களும் கல்விமான்களும்; இப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

எதிர்கால சந்ததியினை சிறந்த வகையில் உருவாக்குபவர்களாக இருக்கின்ற நீங்கள் உங்களது கல்வித் தரத்தினை வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தினை ஒரு கல்வித் தரத்தில் சிறப்பான நிலையில் இருக்கின்ற மாகாணமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றோம். அந்தப்பணியை ஏற்றிருக்கின்றோம்.

அந்த வகையில், எதிர்கால சந்ததியினை சிறந்த வகையில் வளத்துடன் உருவாக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X