2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'மாகாண சபை முறையை ஏனைய மாகாணங்கள் உச்சளவில் பயன்படுத்தியுள்ளன'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமைகளை ஏனைய மாகாண சபைகள் உச்சளவில் பயன்படுத்தியிருக்கின்றன. ஆனால் எமது மாகாண சபை அப்படியல்ல. இப்போது இல்லாமல் செய்வதற்கு ஒரு தரப்பும், தலை வாலை அறுக்க இன்னொரு தரப்பும் முயன்று வருகின்றன' என கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை தெரிவித்தார்

மட்டக்களப்பு, சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'எந்த ஒரு விடயமுமே புதிதாக ஆரம்பிக்கப்படும்போது பெரிளயவான சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். அந்த வகையில் கிழக்கு மாகாணசபையும், கடந்த 2008ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்படும்போது மக்கள் ஆட்சிக்குள் கொண்டு வருவதற்காக, பல்வேறு சவால்களை முன்னாள் முதலமைச்சர் எதிர்கொண்டிருந்தார்.

இப்போதுள்ள நெருக்கடி நிலை அப்படியல்ல. 100 வீதம் முஸ்லிம்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு தமிழர் சென்றால் அங்கு உள்ள மௌலவியிடமே ஏதாவது உதவி தேவையென்றால் கேட்பார். அதேபோன்று சிங்களப்பிரதேசத்திற்குச் சென்றால் பௌத்த பிக்குவிடமே உதவி கேட்பார். அந்த வகையில் சமாதானத்தை ஏற்படுத்துபவர்களாக மதத்தலைவர்கள் இருக்க வேண்டும்.

எல்லா மக்களுக்கும் சொந்தமான நாடு. தமது மதக் கடமைகளை தமது மதஸ்த்தலத்திலே செய்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். மதங்கள் இன ஒற்றுமை, சமாதானம், சாந்தியை ஏற்படுத்துபவையாக இருக்க வேண்டும். அது இந்த நாட்டில் இல்லாமல் போயுள்ளது.

ஒரு மதத்திலுள்ளவர்களை மற்றைய மதத்தவர்கள் அடித்தால் தண்டனையுண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை ஆண்டவன் ஏற்றுக் கொள்வான் என குர்ஆன் சொல்கிறது. அதில் இஸ்லாம் என்று சொல்லவில்லை. எல்லா மதத்தவருக்கும் அது பொதுவானது.

எமது நாட்டில் மூன்று இனங்கள் வாழுகிறோம் என்ற வகையில் அடுத்தவரை மதித்து, சமாதானமாக வாழவேண்டிவர்கள் என்ற வகையில் மற்றையவர்களை மதிக்கின்றவர்களாக வாழவேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X