2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இமாம்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரால் சேகரிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்களின் பெயர், முகவரி மற்றும் கடமையாற்றும் பள்ளிவாசல்கள் போன்ற விபரங்கள் பொலிஸாரினால் திரட்டப்பட்டுகின்றன. கடந்த மூன்று தினங்களாக காத்தான்குடி பொலிஸாரினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

"கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்திர மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்களின் இமாம்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்காகவே இமாம்களின் விபரங்கள் திரட்டப்படுவதாக" காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினரின் உதவியுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு குழுவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியினால் இந்த விபரங்கள் திரட்டப்படுவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X