2025 மே 05, திங்கட்கிழமை

பெண்ணை காப்பாற்றிய பொலிஸாரை கௌரவிக்க ஏற்பாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, கல்லடி புதிய பாலத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய இரண்டு பொலிஸாரையும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு கௌரவிக்கவுள்ளதாக மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

இதற்கான நிகழ்வொன்றினை விரைவில் நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 5.8.2013 திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் விழுந்துள்ளார்.

இப்பெண் விழுந்ததை கண்டு, அவ்விடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மோட்டார் போக்குவரத்து பொலிஸார் இருவர் தாமும் பாலத்தில் குதித்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் துணிகரத்தையும் அவர்கள் அப்பெண்ணின் உயிih காப்பாற்ற எடுத்த முயற்சியையும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு பாராட்டி கௌரவிக்கவுள்ளதுடன் குறித்த பெண் தற்கொலை செய்ய முற்சித்த காரணம் தொடர்பிலும் அறிய உள்ளதாக மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா மேலும் தெரிவித்தார்.

கே.பண்டார (பி.சி.77890), ஏ.பி.ஜயசிங்க (பி.சி.75821) ஆகிய இரு போக்குவரத்து பொலிஸாரே இப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X